`இந்தக் கோரிக்கையை சட்டப்பேரவையில் பேசுங்கள்'- எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயிகள் நேரில் மனு

`இந்தக் கோரிக்கையை சட்டப்பேரவையில் பேசுங்கள்'-  எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயிகள் நேரில் மனு

மழையால் பாதித்த 16 ஆயிரம் ஹெக்டேர் மிளகாய் சாகுபடிக்கு நிவாரணம் பெற்றுத்தரக்கோரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயிகள் நேரில் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமியிடம் தமிழக வைகை பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் பாக்கியநாதன் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், ``ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 1.28 ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி செய்து 90 நாட்கள் கடந்து விட்டன. இதில் ஏற்பட்ட பயிர் இழப்பு கணக்கெடுப்பை வெளிப்படையாக நடத்த வேண்டும்.

சிறு, குறு விவசாயம் என கணக்கெடுப்பு செய்யாமல் அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீட்டு தொகை தமிழக அரசு வழங்க வேண்டும். நடப்பாண்டில் விவசாயிகள் பெற்ற கால்நடை வளர்ச்சி கடன், பயிர்க்கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும். பிரதமர் தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்திற்கு ரேண்டம் எண் முறையை தவிர்த்து நடப்பாண்டு பெய்த மழையளவு அடிப்படையில், ஆய்வு செய்யவேண்டும்.

பண்ணைக் குட்டை முறையில் பயிர் மகசூலை பயன்படுத்தக்கூடாது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020-2021 நிதி ஆண்டில் மழையால் பாதித்த 16 ஆயிரம் ஹெக்டேர் மிளகாய் விவசாயிகளுக்கு நிவாரணம், ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி குண்டாறு வைகை இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க சட்டமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in