மோடி தலைமையில் முதலமைச்சர்கள் கூட்டம்: டிச.4-ல் டெல்லி செல்கிறார் ஸ்டாலின்

மோடி தலைமையில் முதலமைச்சர்கள் கூட்டம்: டிச.4-ல் டெல்லி செல்கிறார் ஸ்டாலின்

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் முதலமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் டிச.4-ம் தேதி டெல்லி செல்கிறார்.

வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் என மொத்தம் 20 நாடுகள் பங்கேற்கும் ஜி 20 மாநாடு இந்தோனேசியாவில் அண்மையில் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிதி சுனக் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி 2023-ம் ஆண்டு இந்தியாவில் ஜி 20 நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவது வழக்கம். டெல்லியில் ஜி 20 மாநாடு முன்னேற்பாடுகள் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறு உள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் டிச. 4-ம் தேதி டெல்லி செல்ல உள்ளார். மேலும் தனிப்பட்ட முறையில் பிரதமரை சந்தித்து, தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளையும் முன்வைக்க தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுநரை திரும்பப்பெற திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் குடியரசுத்தலைவரிடம் மனு அளித்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in