கர்நாடகாவில் ராமர் கோயில் கட்டப்படும்: பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பு

காதில் பூவுடன் சட்டசபைக்கு வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை
கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கர்நாடகாவில் ராமர் கோயில் கட்டப்படும்: பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பு

கர்நாடகாவில் உள்ள ராமநகராவில் ராமர் கோயில் கட்டப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டப்பேரவையில் முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைத் தணிக்கவும், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களைத் தடுக்கவும் உலக வங்கியுடன் இணைந்து 3 ஆயிரம் கோடிக்கான திட்டத்தை முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

கல்வித் துறையில், அரசு முன் பல்கலைக்கழகம் மற்றும் அரசு பட்டயக் கல்லூரிகளில் பயிலும் சுமார் 8 லட்சம் மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும். அதே நேரத்தில் மாநிலத்தில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களின் மேம்பாட்டிற்காக சுமார் 1000 கோடி ஒதுக்கீடு செய்வதாகவும் பொம்மை உறுதியளித்தார்.

அத்துடன் கர்நாடகாவில் உள்ள ராமநகராவில் ராமர் கோயில் கட்டப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், கர்நாடாகவில் ஆளும் பாஜக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சி, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காதில் பூவுடன் சட்டப்பேரவைக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in