முதல்வரின் மனைவி திருப்பதியில் மொட்டையடித்து வேண்டுதல்!

முதல்வர் சந்திரசேகர் ராவின் மனைவி
முதல்வர் சந்திரசேகர் ராவின் மனைவி

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மனைவி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று காலை மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினார். சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டி அவர் வழிபாடு செய்ததாகக் கூறப்படுகிறது

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மனைவி ஷோபா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் திருமலை வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று காலையில் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த தோமாலை, அர்ச்சனை சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அர்ச்சகர்கள், அவருக்கு கோயில் பிரசாதங்கள் வழங்கி ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.

மனைவியுடன் முதல்வர் சந்திரசேகர் ராவ்
மனைவியுடன் முதல்வர் சந்திரசேகர் ராவ்

இதைதொடர்ந்து ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிய நிலையில் முதல்வர் கேசிஆர் நலமுடன் இருக்கவும், தேர்தலில் பிஆர்எஸ் கட்சி வெற்றிபெற வேண்டியும் முதல்வரின் மனைவி ஷோபா சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in