விடுதலைக் கனலை மூட்டிய ஒண்டிவீரனின் புகழைப் போற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

விடுதலைக் கனலை மூட்டிய ஒண்டிவீரனின் புகழைப் போற்றுவோம்:  முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "வீரம் செறிந்த விடுதலைப் பக்கங்களில் விண்ணுயரப் புகழடைந்த பூலித்தேவரின் படைத்தளபதி ஒண்டிவீரனின் 251-வது நினைவுநாள். 2011-ல் அவரது நினைவு மண்டபத்துக்கு கால்கோளிட்டது கலைஞர் ஆட்சி. ஆங்கிலேய வல்லாதிக்கத்துக்கு எதிராக விடுதலைக் கனலை மூட்டி, ஆதிக்கம் தகர்த்த அவரது புகழ் போற்றுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in