‘உங்கள் சொற்படியே நடக்கிறேன்; வென்றபடியே இருக்கிறேன்’ - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

‘உங்கள் சொற்படியே நடக்கிறேன்; வென்றபடியே இருக்கிறேன்’ - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

திமுக தலைவராகப் பொறுப்பேற்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. இந்த நிலையில் தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான திமுக தலைவர் கருணாநிதியை நினைவுகூர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை அவர் எழுதியிருக்கிறார்.

அந்தப் பதிவில், ‘தகைசால் தந்தையே, தன்னிகரற்ற தலைவரே, முதல்வர்களின் மூத்தவரே, கலை உலக வேந்தரே, எங்களின் உயிரே, உணர்வே!

தாங்கள் வகித்த திமுக தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். ஒவ்வொரு அடியும் நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால் தான் வென்றபடி இருக்கிறேன். மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த ட்விட்டர் பதிவு திமுகவினரால் படுவேகமாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in