98-வது வயதில் அடியெடுத்து வைத்தார் நல்லகண்ணு: முதல்வர் ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து!

98-வது வயதில் அடியெடுத்து வைத்தார் நல்லகண்ணு: முதல்வர் ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் பிறந்தநாளை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக இருந்து வருபவர் நல்லகண்ணு. இவரது எளிமை அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் தனது 98-வது பிறந்தநாளில் இன்று அடியெடுத்து வைத்துள்ளார் நல்லகண்ணு. இதையொட்டி, கட்சி சார்பில் நடத்தப்பட்ட பிறந்தநாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நல்லகண்ணு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேசிய முதல்வர், “பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட நாம் எடுக்கும் முயற்சிக்கு வழிகாட்டியாக நல்லக்கண்ணு திகழ்கிறார்” என்றார். இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் பங்கேற்று நல்லகண்ணுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில், "உழைப்பும் எளிமையும் ஒருங்கே உருவம் கொண்ட சுதந்திரப் போராட்ட வீரர், பொதுவுடமைப் போராளி, தகைசால் தமிழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்களுக்கு, எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும், வணக்கங்களும். அய்யா- இருங்கள் எம்மோடு ஒரு நூறாண்டு" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in