பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

ஒருநாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது, நீட் விலக்கு, கல்விக் கொள்கை, மேகேதாட்டு உள்ளிட்ட தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் வழங்கினார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு நேரில் முதல்வர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும், தமிழகத்தின் வளர்ச்சி தொடர்பான முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை திறந்து வைத்ததற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்தபோது, பிரதமர், தமிழக அரசு நிகழ்ச்சியை நடத்திய பிரமாண்டமான விதத்தைப் பாராட்டினார். மேலும் இது இந்தியாவிற்கு பெருமையான தருணம் என்று தெரிவித்தார் என முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in