
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 84-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், `பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். சமூகநீதிக் களத்தில் மேலும் பல்லாண்டுகள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற விழைகிறேன்' என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், `பாட்டாளி மக்களுக்கு அரணாக இருப்பவர், அன்பு உள்ளம் கொண்ட இளைஞர்களின் வழிகாட்டி மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 84-வது பிறந்த தினமான இன்று, அவர் நீண்ட ஆயுளுடன் மக்கள் சேவையைத் தொடர தமிழக பாஜக சார்பாக வாழ்த்துகிறேன்' என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், `பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர், மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பெரியவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.