பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன்... பிரதமர் உரை குறித்து முதல்வர் ஸ்டாலின் கிண்டல்!

சென்னை விமான நிலையம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை விமான நிலையம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையைப் பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக ஸ்பெயின் சென்றிருந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்பினார். அவருக்கு திமுக எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன் பின் அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஸ்பெயினுக்கு சென்ற நான் தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை ஈர்த்துவிட்டு வந்துள்ளேன். கடந்த ஜனவரி 29-ம் தேதி ஸ்பெயின் சென்றேன். முதலாவதாக ஸ்பெயினின் முன்னணி தொழில் அதிபர்கள் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

ஸ்பெயின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் நிர்வாகிகளைச் சந்தித்தேன். தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்குரிய உகந்த சூழல் குறித்து மாநிலத்தில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தினேன். 

ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின்
ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின்

காற்றாலை மின் உற்பத்தி, நீர் மறுசுழற்சியில் முன்னணியில் உள்ள ஆக்சியானா நிறுவனம், உயர்தர வீட்டுக்கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்யும் ரோக்கா, கண்டெயினர் முனையங்களை அமைக்கும் ஹபக்ராயுடு நிறுவனம், சாலை கட்டமைப்பு வசதிகளைச் செய்யும் அப்ரட்டீஸ் நிறுவனம், மோட்டார் வாகன உற்பத்தி செய்யும் கெஸ்டாம் நிறுவனம், ரயில்வே சார் பொருட்களை உற்பத்தி செய்யும் டால்கோ நிறுவனம், பொறியியல் வடிவமைப்பு பயிற்சிக்கான எடிபான் நிறுவனம், மருந்து உற்பத்தி நிறுவனமான மேப்ட்ரீ நிறுவனங்களின் நிர்வாகிகளைச் சந்தித்து பேசினேன். 

இவர்கள் தமிழ்நாட்டில் தங்கள் முதலீடுகளைச்  செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளனர். இதனால் 3 ஆயிரத்து 440 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. 

ஸ்பெயினில் ஒப்பந்தம் கையெழுத்து
ஸ்பெயினில் ஒப்பந்தம் கையெழுத்து

நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையைப் பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன். பாஜகதான் எதிர்க்கட்சி போலவும், காங்கிரஸ்தான் ஆளுங்கட்சி போலவும் பிரதமர் பேசியுள்ளார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் 400  தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி கைப்பற்றும் என்று அவர் கூறியிருக்கிறார்.  மொத்தம் 400 தானா, 543 இடங்களையும் கைப்பற்றுவோம் என்று அவர் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்கிறேன்.  மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்வேன்" என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in