சோனியா காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சோனியா காந்திக்கு  முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவர் சோனியாகாந்திக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி இன்று தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சோனியா காந்திக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்," காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவருக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான ஆண்டாக இந்த ஆண்டு அமைய வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in