`துடிப்பான மனிதராக வாருங்கள்'- விஜயகாந்த்துக்கு முதலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

`துடிப்பான மனிதராக வாருங்கள்'- விஜயகாந்த்துக்கு முதலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

உடல்நிலை பாதிப்பால் அரசியலில் செயல்படாமல் இருந்து வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். வீட்டிலேயே இருந்து வந்த விஜயகாந்த், நடந்து முடிந்த 75-வது சுதந்திர தின விழாவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் தனது மனைவியுடன் வந்து தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது, விஜயகாந்த்தை பார்த்த மகிழ்ச்சியில் அவரது தொண்டர்களும், நிர்வாகிகளும் தலைவா, தலைவா எங்களைப் பாருங்கள் என்று முழங்கியது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

இந்நிலையில், விஜயகாந்த் தனது 70-வது வயதில் இன்று அடியெடுத்து வைத்துள்ளார். இதையடுத்து, கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளை அவர் சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே விஜயகாந்த்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பெற்று, துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in