முதுபெரும் தலைவர் சங்கரய்யா மறைவு: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்த முதல் ஆளாகச் சென்ற முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

முதுபெரும் இடதுசாரித் தலைவரும், இந்திய சுதந்திர போராட்ட வீரருமான என்.சங்கரய்யா இன்று காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

முதல்வர் ஸ்டாலின் - சங்கரய்யா
முதல்வர் ஸ்டாலின் - சங்கரய்யா

திமுக ஆட்சிக்கு வந்தததும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதினை வழங்கி சிறப்பித்தது. அதேபோல அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டுமென தமிழக ஆளுநரை தொடர்ச்சியாக வலியுறுத்தியது ஆனால் அதற்கு ஆளுநர் சம்மதிக்காததால் அது தற்போது வரை நிறைவேறவில்லை.

இந்த நிலையில் தான் சளி மற்றும் சுவாச பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கரய்யா இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு முதல்வர் மிகுந்த வருத்தமடைந்தாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனது அமைச்சரவை சகாக்களுடன் இணைந்து முதல் ஆளாக மருத்துவமனையில் வைக்கப்பட்ட என்.சங்கரய்யா உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ’’மறைந்த சங்கரய்யா அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும். நாட்டின் விடுதலைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் மீட்சிக்கும் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்திட வேண்டும்’’ என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!

மீண்டும் மீண்டுமா... அடுத்த சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்!

பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

கிராமத்தில் 20 முறைக்கும் மேல் மின்தடை: அதிகாரிகளைப் பழிவாங்க கவுன்சிலர் செய்த அதிர்ச்சி காரியம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in