மதுரை தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் மரியாதை
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் மரியாதை

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை மற்றும் தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர்கள்  மருது சகோதரர்கள் சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தினார்.

தேவர் சிலைக்கு மரியாதை
தேவர் சிலைக்கு மரியாதை
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு மதுரை வந்து சேர்ந்தார்.

இன்று காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் பிரம்மாண்ட சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்,  சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற, மக்களவை உறுப்பினர்களும் தேவர் சிலைக்கும், உருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தினர்.

இதை தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பின்னர்  பசும்பொன் செல்லும் வழியில் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்களின் சிலைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேவர் சிலைக்கு மரியாதை
தேவர் சிலைக்கு மரியாதை

இந்த நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவ், உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து காலை 9.50 மணியளவில் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in