இடித்துச் சொன்ன தளபதி... இணக்கம் காட்டிய மகேஷ்!

இடித்துச் சொன்ன தளபதி... இணக்கம் காட்டிய மகேஷ்!

திமுகவினர் உள்ளடி வேலைகளை விட்டுவிட்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்த அழுத்தம் இன்னும் அதிகமாகி இருக்கிறதாம். “சின்னச் சின்ன விஷயங்களைக்கூட பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேடும் வேலைகளை பாஜக  செய்கிறது.  தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க நினைக்கிறார்கள். இந்த நேரத்தில் நீங்கள் ஒற்றுமையுடன் செயல்படாமல் உங்களுக்குள் கோஷ்டி மனப்பான்மையுடன்  செயல்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலில்  நாம் பல  தொகுதிகளை இழக்க நேரிடும். இனியும் இதைப் புரிந்துகொள்ளாமல் கோஷ்டி அரசியல் நடத்தினீர்களானால் எனக்கு நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களிடம் கண்டிப்புடன் அறிவுறுத்தியிருக்கிறாராம் ஸ்டாலின். 

இந்த அறிவுறுத்தலை அடுத்தே திருச்சி திமுகவிலும் காட்சிகள் மாறியிருக்கின்றன. இன்று அங்கு நடைபெற்ற திருச்சி மத்திய மாவட்ட திமுக  செயல்வீரர்கள் கூட்டத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷை போன் வழியாகத் தான் அழைத்தாராம் மூத்த அமைச்சர் கே.என்.நேரு. மறுத்துப் பேசாமல் மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு வந்து கலந்துகொண்ட மகேஷ், “அண்ணன் நேரு எங்களுக்கு துரோணாச்சாரியார் போன்றவர்.  அவர் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்படுவோம்” என்று இணக்கம்காட்டினாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in