பாடல் படப்பிடிப்பில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்: என்ன காரணம்?

பாடல் படப்பிடிப்பில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்: என்ன காரணம்?

முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த பாடல் படப்பிடிப்பில் பங்கேற்ற புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள். முதன் முறையாக தமிழகத்தில் நடைபெற உள்ள இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் தமிழக அரசு வாகனங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த வாகன பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பாடல் படப்பிடிப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை நேப்பியர் பாலத்தில் கடந்த 7-ம் தேதி இந்த படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in