பழ.நெடுமாறனுடன் முதல்வர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

நெடுமாறனை சந்தித்து உரையாடும் முதல்வர் ஸ்டாலின்
நெடுமாறனை சந்தித்து உரையாடும் முதல்வர் ஸ்டாலின்

உடல் நலக்குறைவால் மதுரையில் உள்ள தனது வீட்டில் படுக்கையில் ஓய்வெடுத்து வரும் உலகத் தமிழர் பேரமைப்பின்  தலைவர்  பழ. நெடுமாறனை முதல்வர் ஸ்டாலின் இன்று  சந்தித்து நலம் விசாரித்தார். 

தேவர் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தும் முதல்வர் ஸ்டாலின்
தேவர் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தும் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக மதுரை சென்று அரசு நிகழ்ச்சி மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார். இன்று காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்த முதல்வர் ஸ்டாலின்,  அதன் பின்னர் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு பசும்பொன் கிராமத்திற்கு சென்று தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

அங்கிருந்து மீண்டும் மதுரைக்கு திரும்பிய முதல்வர் ஸ்டாலின், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும்,  மூத்த அரசியல்வாதியுமான  பழ.நெடுமாறன் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்டு அவரை சந்தித்து நலம் விசாரிக்க விரும்பினார். 

பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன்

இதையடுத்து பழ.நெடுமாறன் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் அவரது இல்லத்தில் இருந்து நெடுமாறனிடம் உடல் நலம் குறித்து விசாரித்து தெரிந்து கொண்டார்.   நெடுமாறனின் குடும்பத்தினரும் அப்போது உடனிருந்தனர். அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்,  தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலரும் முதல்வருடன் சென்றிருந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!

அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!

110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!

1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!

படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி! 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in