ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்: பரபரப்பு பேட்டி!

ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்: பரபரப்பு பேட்டி!

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரை டெல்லியில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

டெல்லியில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவரின் பதவியேற்பு விழாவில் என்னால் கலந்து கொள்ள முடியாத காரணத்தால், அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அவர்களுடனான சந்திப்பு எனக்கு மனநிறைவை அளித்துள்ளது. இதனையடுத்து இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளேன். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொண்டமைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த சந்திப்பு நடைபெறும். இந்த சந்திப்பின்போது நீட், புதிய கல்விக்கொள்கை, மின்சார திட்டங்கள் , மேகதாது பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தவுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்காருடனான சந்திப்பின்போது அவருக்கு தமிழ்நாட்டில் நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த ‘ ஹோம் ஆஃப் செஸ்’ என்ற புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பிரதமருடனான சந்திப்புக்கு பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவே டெல்லியிருந்து சென்னை திரும்பவுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in