குமரியில் வெள்ள சீரமைப்பு பணிகள்: முதல்வர் ஆய்வு

குமரியில் வெள்ள சீரமைப்பு பணிகள்: முதல்வர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சாலை, மற்றும் வெள்ள சீரமைப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துவருகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் இந்தியாவின் முதல் பர்னிச்சர் ஆலைக்கு இன்று காலையில் அடிக்கல் நாட்டினார். மாலையில் குமரிமாவட்டத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழியில் அமைச்சர் மனோதங்கராஜ், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மகேஷ் ஆகியோர் தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்றவர் சிறிதுநேரம் ஓய்வு எடுத்தார். தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பலத்த சேதத்திற்கு உள்ளான டெரிக் சந்திப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சாலைப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் குடிநீர் அபிவிருத்தித் திட்ட பணிகளையும் பார்வையிட்டார்.

பேயன்குழிப்பகுதியில் மழைவெள்ளத்தால் சேதமடைந்து, சீரமைக்கப்பட்ட கால்வாய் பகுதிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து குமாரகோவில் பகுதியில் மழை வெள்ளத்தால் சேதமான கால்வாய் சீரமைப்புப் பணிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வுப்பணிகளுக்குப் பின் சாலை மார்க்கமாக மதுரை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வர் வருகையையொட்டி குமரிமாவட்டத்தில் 1200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in