மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரிப்பு!

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரிப்பு!

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்து வரும் இல.கணேசன் ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வரும் அவருக்கு சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இல.கணேசனிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ஆளுநர் இல.கணேசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைந்து முழு உடல்நலன் பெற்று, தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பிட விழைகிறேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in