பொங்கல் பண்டிகை - அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் குடும்பத்துடன் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

பொங்கல் பண்டிகை - அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் குடும்பத்துடன் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களில், பொங்கல் திருநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் மரியாதை செலுத்தினார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குடும்பத்தினருடன் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வுக்காக அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வின்போது முதல்வர் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் உடனிருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in