`நான் யார் பேசுகிறேன் என்று தெரிகிறதா?'- புகார் அளித்தவரிடம் கேட்ட முதல்வர் ஸ்டாலின்

`நான் யார் பேசுகிறேன் என்று தெரிகிறதா?'- புகார் அளித்தவரிடம் கேட்ட முதல்வர் ஸ்டாலின்

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தொலைபேசியில் புகார் அளித்தவர்களிடம் பேசி அவர்களின் குறைகளை உடனே சரி செய்ய உத்தரவிட்டார்.

தமிழகத்தில் சில மாதங்களாக மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்த தடைக்கு நிலக்கரி பற்றாக்குறையே காரணம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிவந்ததோடு, படிப்படியாக மின் தடை சரி செய்யப்படும் என்று அறிவித்தார். ஆனால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு அடிக்கடி சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அப்போது, புகார் அளித்த பொதுமக்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேரிடையாகவே பேசி வருவதோடு, அவர்களின் குறைகளை உடனடியாக தீர்த்து வருகிறார்.

இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது, 10 லட்சமாவது நுகர்வோருடன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர்சேவை பற்றி கேட்டறிந்தார். வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன். உங்க பெயர் என்ன? எந்த ஊர்? என்று முதல்வர் கேட்கிறார். அப்போது, எதிர்முனையில் பேசியவர், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி என்று சொல்கிறார். என்ன புகார் செய்தீர்கள் என்று முதல்வர் கேட்டபோது அந்த நபர் பதில் கூறுகிறார். பின்னர், அனைத்தும் சரியாகிவிட்டதாக என்று முதல்வர் கேட்கிறார். மேலும், எவ்வளவு நாளில் புகார் சரி செய்யப்பட்டது என்றும் முதல்வர் கேட்டறிகிறார். கடைசியாக, நான் யார் பேசுகிறேன் என்று தெரிகிறதா? என்று முதல்வர் கேட்டவுடன், அவர் பதில் அளிக்கிறார். முதல்வரும் நன்றி நன்றி என்று கூறி முடிக்கிறார்.

இதைத் தொடர்ந்து, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், அதிகமாக புகார் வரும் மாவட்டம் எது என்று முதல்வர் கேட்கிறார். அதற்கு அமைச்சர், சென்னை என்று பதில் அளிக்கிறார். தொடர்ந்து அங்கிருந்து முதல்வர் புறப்பட்டுச் சென்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in