பாதுகாப்பைக் குறைத்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின்!

பாதுகாப்பைக் குறைத்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் சாலைப் பயணங்களின் போது போக்குவரத்தை சீரமைப்பதற்கும், பாதுகாப்பிற்காகவும் நிற்கக் கூடிய காவலர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வீட்டிலிருந்து தலைமைச் செயலகம் செல்லும் போதும், வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போதும் காவல்துறையினர் அதிக அளவு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களுடன் போக்குவரத்து காவலர்களும் போக்குவரத்தைச் சீரமைப்பதற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முதல்வரின் துரிதப் பயணத்திற்காக இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

அப்போது 20 அடிக்கு ஒரு காவலர்கள் வீதம் பாதுகாப்புப் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டு வந்தநிலையில், முக்கிய சந்திப்புகள், நெருக்கடியான இடங்களில் மட்டும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இன்று முதல்வர் பயணித்த போது வழக்கமான வாகனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் காரும் பயணித்தது. அண்ணாசாலையில் உள்ள டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் முதல்வர் சென்று கொண்டிருந்த போது அருள்ராஜ் என்பவர் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். இதையடுத்து முதல்வர் அவருக்கு உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in