முதல்வர் ஸ்டாலின்தான் பாஜகவுடன் கள்ள உறவு வைத்துள்ளார்... கே.பி.முனுசாமி காட்டம்!

அதிமுக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி
அதிமுக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி

முதலமைச்சர் ஸ்டாலின்தான் பாஜகவுடன் கள்ள உறவு வைத்துள்ளார் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கடுமையான விமர்சித்துள்ளார்.

வேட்பாளர் அறிமுக கூட்டம்
வேட்பாளர் அறிமுக கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அதிமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி பங்கேற்று வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடையே பேசிய அவர்,” பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் கள்ள உறவு இருப்பதாக ஸ்டாலின் விமர்சிக்கிறார். நாங்கள் கள்ள உறவு வைக்கவில்லை. நீங்கள்தான் பாஜகவுடன் கள்ள உறவு வைத்துள்ளீர்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தபோது ’கோ பேக் மோடி...’ என்று ஸ்டாலின் கூறியதோடு கருப்புக் கொடியும் காட்டினார். ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுது ’வெல்கம் மோடி..’ என்று கூறி ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறார்.

அதிமுக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி
அதிமுக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி

இரண்டு ஆண்டுகளில் என்ன ஆயிற்று.? ’கோ பேக் மோடி’ என்று முன்பு சொல்லிவிட்டு, இப்போது மோடியை ’வெல்கம்’ என்று சொல்லும் ஸ்டாலின்தான், ஏதோ ஒன்றில் மாட்டிக் கொண்டிருக்கிறார். மேடைகளில் ஏதோ பேசுகிறார். உள்ளூர அவருக்கு பயம் இருக்கிறது. மீண்டும் ஏதாவது பிரச்சினை வந்தால் சரணடைந்து விடுவது என்ற பயம். ஆனால், நாங்கள் சரணடைய மாட்டோம். சரணடையும் இயக்கம் அண்ணா திமுக இல்லை” என கூறினார்.

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் வாசிக்கலாமே...  

ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in