இல.கணேசன் இல்ல விழாவில் முதல்வர்கள் ஸ்டாலின், மம்தா, ஆளுநர் தமிழிசை, ரஜினி பங்கேற்பு!

இல.கணேசன் இல்ல விழாவில் முதல்வர்கள் ஸ்டாலின், மம்தா, ஆளுநர் தமிழிசை, ரஜினி பங்கேற்பு!

மேற்குவங்க ஆளுநர் இல.கணேசனின் சகோதரரின் பிறந்தநாள் விழாவில் முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, ஆளுநர் தமிழிசை, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

மேற்குவங்க ஆளுநர் இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலனின் சதாபிஷேக விழா சென்னை கோடம்பாக்கத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மேற்குவங்க ஆளுநர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் வாழ்த்திவிட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார். இவர்கள் சென்ற பின்பு முதல்வர் ஸ்டாலின், திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் இல.கணேசனின் இல்லத்திற்கு வந்தனர். அவர்களை இல.கணேசன் வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். முன்னதாக விழாவில் பங்கேற்க வந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அங்கு செண்டை மேளம் அடித்துக் கொண்டிருந்தவர்களிடம் சென்று அவரும் செண்டை மேளம் அடித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் வீட்டிற்கு சென்று இல.கணேசன் சகோதரனை வாழ்த்தினார்.

இல.கணேசன் இல்ல விழாவில் இரண்டு மாநில முதல்வர்கள், ஆளுநர், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் ஒரே நேரத்தில் வருகை தந்திருப்பது அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in