முதலமைச்சர் ஸ்டாலின் செய்தது சரியே: டிடிவி தினகரன் பேட்டி

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தது சரியே என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், " ஆளுநர் கடிவாளம் போல் இருந்து செயல்படுவது தவறில்லை. ஆனால் தமிழகத்தின் வளர்ச்சியைப் பாதிக்கக் கூடாது. அது தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு நல்லதல்ல என்பது ஒரு குடிமகனாக என்னுடைய கருத்து. அதேவேளையில் ஆளுநர் ரவி, தமிழக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறாரோ என்றே தோன்றுகிறது.

திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை முறையாக செயல்படுத்தவில்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் அரசுக்கு எதிராக போராடும் போது அதை திசைத் திருப்பும் விதமாக தமிழ்நாடு, தமிழகம் என சட்டப்பேரவை வெளி நடப்பு என தேவையில்லாமல் செயல்படுகிறாரோ என்று தோன்றுகிறது.

ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சரியே. ஆளுநர் உரை முன்பே ஆளுநருக்கு அனுப்பப்பட்டு இருக்கும் அப்போதே அதனைத் திருத்தி அனுப்பி இருக்கலாம் அதைவிடுத்து ஆளுநர் அரசியல்வாதி போல் நடந்தால் முதலமைச்சரும் அரசியல்வாதி போல் நடந்துக் கொண்டார். ஆக நேற்றைய சம்பவம் ஜனநாயகத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவுக்கும் எனக்கும் என்ன பிரச்சினை என்பதற்கு காலம் பதில் சொல்லும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in