சமத்துவ இந்தியாவைக் கட்டமைக்கும் பயணத்தில் இணைந்து வெற்றி காண்போம்: திருமாவிற்கு ஸ்டாலின் வாழ்த்து

சமத்துவ இந்தியாவைக் கட்டமைக்கும் பயணத்தில் இணைந்து வெற்றி காண்போம்:  திருமாவிற்கு ஸ்டாலின் வாழ்த்து

இன்று மணிவிழா கொண்டாடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று மணிவிழாவை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்று ட்விட்டர் பக்கத்தில்," மணிவிழா காணும் அன்புச்சகோதரர் எழுச்சித்தமிழர் திருமாவளவனை நெஞ்சார வாழ்த்துகிறேன். சனாதன சங்கத்துவத்தை வீழ்த்தி சமத்துவ இந்தியாவைக் கட்டமைக்கும் நமது பயணத்தில் இணைந்து வெற்றி காண்போம்" என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in