`ஜனநாயகத்துக்கு துணை நிற்பார் என நம்புகிறேன்'- திரெளபதி முர்முக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

`ஜனநாயகத்துக்கு துணை நிற்பார் என நம்புகிறேன்'- திரெளபதி முர்முக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரெளபதி முர்முக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தது. முதல் சுற்றில் இருந்து திரெளபதி முர்மு முன்னிலை பெற்று வந்தார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி பெற்றதாக இரவு 9.40 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றுள்ள முர்முக்கு பிரமதர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் காேவிந்த், எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உரிமைகள் மறுக்கப்பட்டவர்களின் குரலாக இருந்து ஜனநாயகத்துக்கு துணை நிற்பார் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு, இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, பழங்குடி இனத்தவரின் பிரதிநிதி திரவுபதி முர்மு அவர்களுக்கு அதிமுக சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in