பார்வையற்றோர் பள்ளியில் பிறந்த நாளைக்கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்

பார்வையற்றோர் பள்ளியில் நடந்த முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழா.
பார்வையற்றோர் பள்ளியில் நடந்த முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழா.பார்வையற்றோர் பள்ளியில் பிறந்த நாளைக்கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் உள்ள பார்வையற்றோர் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

குழந்தைகளுக்கு கேக் ஊட்டி மகிழும் முதல்வர் ஸ்டாலின்.
குழந்தைகளுக்கு கேக் ஊட்டி மகிழும் முதல்வர் ஸ்டாலின்.பார்வையற்றோர் பள்ளியில் பிறந்த நாளைக்கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மனைவி துர்காவோடு கலந்துகொண்டு பள்ளிக்குழந்தைகளோடு இணைந்து தனது 70-வது பிறந்தநாளைக் கேக் வெட்டி கொண்டாடினார்.

அப்போது அங்கிருந்த குழந்தைகளுக்கு கேக் ஊட்டியும், பரிசுகளை வழங்கியும் ஸ்டாலின் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு குழந்தைகள் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in