முதல்வர் ஸ்டாலின்- நடிகர் விஜய் திடீர் சந்திப்பு: நடந்தது என்ன?

முதல்வர் ஸ்டாலின்- நடிகர் விஜய் திடீர் சந்திப்பு: நடந்தது என்ன?

சென்னையில் முதல்வர் ஸ்டாலின்- நடிகர் விஜய் திடீரென சந்தித்து பேசினர்.

ஏஜிஎஸ் நிறுவனம் கல்பாத்தி அகோரம் மகள் ஜஸ்வர்யா - பிரபல தொழில் அதிபரின் மகனுமான ராகுல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

தென் இந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்திரி, ஏல்.அழகப்பன், இயக்குனர் சிம்பு தேவன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். மேலும் நடிகர் விஜய் சிவகார்த்திகேயன் சதீஷ் உள்ளிட்டோரும் வருகை தந்தனர். நடிகர் விஜய் வாழ்த்து தெரிவிப்பதற்காக மேடைக்கு வந்த போது முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமண அரங்கிற்குள் வந்தார். மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் ஒரு நிமிடங்கள் சந்தித்து பரஸ்பரம் கை கொடுத்து கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின் விஜய்யை கட்டி அணைத்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பின்னர், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி அங்கிருந்து புறப்பட்டனர். நடிகர் விஜய் மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் திருமண மண்டபத்தில் சந்தித்தபோது அங்கிருந்த அனைவரும் கைதட்டினர். பின்னர் நடிகர் விஜய்யிடம் சிலர் செல்ஃபி எடுக்க முற்பட்டனர். வணக்கம் கூறியவாரே தனியார் திருமண மண்டபத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார் நடிகர் விஜய்.

Related Stories

No stories found.