முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார்?: முடிவுக்கு வந்தது இழுபறி

முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார்?: முடிவுக்கு வந்தது இழுபறி
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார்?: முடிவுக்கு வந்தது இழுபறி

கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்க உள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களை கைப்பற்றியது. எனினும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 5 நாட்களாகியும் கர்நாடகாவில் இன்று வரை ஆட்சி அமைக்கப்படவில்லை. இதற்கு, மூத்த தலைவர்களான சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதுதான் காரணம். இதனிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நேற்று மாலை சித்தராமையாவும், சிவகுமாரும் தனித்தனியே சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் கார்கேவுடன் கர்நாடகா பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர்.

இது தொடர்பாக இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் ஒரு வழியாக முடிவு எட்டப்பட்டு விட்டதாக தெரிகிறது. அதன்படி சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியும் சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனிடையே, இன்று மாலை 7 மணிக்கு நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டத்தில் முதல்வர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வரும் 20-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in