
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்த நடிகர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கூட்டணி கட்சி தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவு கேட்டார். கமல்ஹாசனும் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதற்கு கமல்ஹாசனுக்கு தமிர்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அதில் ‘’ நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான இளங்கோவனுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சருக்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசனும் ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அதில் ‘’ ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். தமிழ்நாடு வாழ்க’’ என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.