ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

முதல்வர் - ஆளுநர்
முதல்வர் - ஆளுநர்

ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 15 முன்னோர்களின் தியாகத்தை நினைவுக் கூர்ந்துள்ள முதல்வர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரனும் அவரது தந்தையும் தற்கொலை செய்துக் கொண்ட செய்தி நம் முன்னோர் தங்களது இன்னுயிர் ஈந்து நமக்கு அளித்த விடுதலை எல்லோருக்குமானதா அல்லது வசதி படைத்த வெகு சிலருக்கானதா என்ற கேள்வி எழுகிறது.

அரியலூர் அனிதா தொடங்கி பல உயிர்களை நாம் இழந்துள்ளோம். இவர்களின் மரணங்கள் எழுப்பும் தார்மீக கேள்விகள் நமது மனசாட்சி உலுக்குகிறது.

நீட் தேர்விற்கு ஒருபோதும் நான் விலக்கு அளிக்கமாட்டேன். அந்த அதிகாரம் எனக்கு இருந்தால் நிச்சயம் நீட் விலக்கு மசோதாவிற்கு கையெழுத்திட மாட்டேன் என்று பொதுவெளியில் ஆளுநர் பேசி இருப்பது தமிழ்நாட்டு மாணவர்களையும், இளைஞர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

ஏழு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பொறுப்பின்றி பேசியிருக்கிறார். தமிழக மக்கள் பற்றி அக்கறையுள்ளோர், தமிழர் உயிர் இறப்பதைக் கண்டு கலங்குவர். ஆனால் ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை என்பது போல் உள்ளது

இந்நிலை மாற வேண்டும். நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி சட்டம் இயற்றிய தமிழக அரசு அதனைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும், இதன் உச்சமாக தமிழ்நாட்டு மாணவர்களை, பெற்றோர்களை, அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15ம் தேதி அவர் அளிக்கும் விருந்தினை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in