சமூகநீதிக்கு எதிரான பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? - வெளுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

பாமக வலியுறுத்தும் கொள்கைகளில் ஒன்றை கூட ஆதரிக்காத பாஜகவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்து ஏன் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

பாஜக பாமக கூட்டணி
பாஜக பாமக கூட்டணி

2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. கிட்டத்தட்ட அதிமுகவுடன் தான் கூட்டணி என்று முடிவான நிலையில், ஒரே நாள் இரவில் பாமக தனது முடிவை மாற்றிக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. பாமகவின் இந்த முடிவிற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், தருமபுரி மாவட்டம், தடங்கல் கிராமத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாமக -பாஜக கூட்டணி குறித்து தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

தருமபுரி பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்
தருமபுரி பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்

அந்த கூட்டத்தில் பேசிய அவர், "இந்திய வரலாற்றிலேயே இது முக்கியமான தேர்தல் இது. ஜனநாயகத்துக்கும், தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கும், எதிர்கால சந்ததியினரை காக்க நீங்கள் வாக்களிக்க வேண்டும். அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இந்தியா என்ற அழகிய நாட்டை பாசிச மதவெறி கொண்ட பாஜக அழிப்பதை தடுக்க ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டுள்ளன. பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் கடமை சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டுக்குதான் பெரும் பங்கு உண்டு.

பாஜக என்பது சமூகநீதிக்கு சவக்குழி தோண்டும் கட்சி. அதேபோல சமத்துவத்தை கிலோ என்னவென்று கேட்கும் கட்சிதான் பாஜக. ஆனால், நாம் பெரிதும் மதிக்கக்கூடியவரும், சமூக நீதி பேசும் பாமக நிறுவனர் ராமதாஸ் சமூகநீதிக்கு எதிரான பாஜகவுடன் எதற்கு கூட்டணி அமைத்தார் என்பது தங்கமலை ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை. பாஜக கூட்டணிக்கு ராமதாஸ் ஏன் சென்றார் என்பது மக்களுக்கும், பாமகவினருக்கும் காரணம் நன்றாக தெரியும். மனது இல்லாமல் பாஜக கூட்டணிக்கு ராமதாஸ் சென்றார் என்பது பாமகவினருக்கே தெரியும். பாமக வலியுறுத்தும் கொள்கைகளில் ஒன்றை கூட ஆதரிக்காத பாஜகவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்து ஏன்" என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in