முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் முடியும்: ராமதாஸ் நம்பிக்கை

முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் முடியும்: ராமதாஸ் நம்பிக்கை

"முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் ஒரே வாரத்தில் வன்னியர் வழக்குக்கு தேவையான புள்ளி விவரத்தை சேகரிக்க முடியும். வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்காக போராட்டங்கள் எதுவும் அறிவிக்கப்போவதில்லை" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்றும் அதே நேரத்தில் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், இடஒதுக்கீடு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்து முடிவு எடுப்பதற்காக சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் பா.ம.க.வின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய மருத்துவர் ராமதாஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்னியர் இடஒதுக்கீட்டை பெற்றுத்தருவார் என்று ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயமும் எதிர்பார்க்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் ஒரே வாரத்தில் வன்னியர் வழக்குக்கு தேவையான புள்ளி விவரத்தை சேகரிக்க முடியும். வன்னியர் உள்ஒதுக்கீடு பெறுவதற்காக போராட்டம் தேவை இருக்காது. வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்காக போராட்டங்கள் எதுவும் அறிவிக்கப்போவதில்லை. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.