திமுகவின் மூத்த உறுப்பினர் விடுதலை விரும்பியிடம் நலம் விசாரித்த முதல்வர்

திமுகவின் மூத்த உறுப்பினர் விடுதலை விரும்பியிடம் நலம் விசாரித்த முதல்வர்

தமிழகத்தின் சிறந்த பேச்சாளரும், திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான விடுதலை விரும்பியை அவரது இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

திமுகவின் மூத்த உறுப்பினரும், தமிழகத்தின் சிறந்த பேச்சாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான ச.விடுதலை விரும்பி வயது மூப்பின் காரணமாக கோவையில் தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலினுக்கு விடுதலை விரும்பி எழுதிய நெகிழ்ச்சியான கடிதம் வைரலானது. அதில், " அண்மையில் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றிருந்த போது தங்களின் அறிவுறுத்தலின்படி என்னைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி நலம் விசாரித்து ஆறுதல் அளித்தார். கழகத்தின் மூத்த தொண்டர்களில் ஒருவனான என்னைப் பேணிப் பாதுகாத்து வரும் தங்களின் அன்பிற்கு நெஞ்சம் நிறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் ஆழமான சிந்தனையும் ஈடு இணையற்ற செயல்திறனும் ஒருங்கிணைந்ததால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பும் வளர்ச்சியும் உறுதி செய்யப்படுவதுடன், நமது வருங்கால தலைமுறையையும், வாழ வழிவகுக்கும் என்று உளமார நம்புகிறேன்.

தமிழ்நாட்டு வரலாற்றில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞரைப் போல் தாங்களும் நிரந்தரமாக இடம் பெற்று விட்டீர்கள் என்பதை நினைத்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கடிதத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கோவைக்கு இன்று சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், விடுதலை விரும்பியை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன், அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் இருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in