ட்ரோன்கள் பறக்கத் தடை... சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று கள ஆய்வு!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் இன்று முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

முதல்வர் ஆலோசனை
முதல்வர் ஆலோசனை

சட்டம் ஒழுங்கு நிலவரம், வளர்ச்சித் திட்ட பணிகள், அரசு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம் குறித்து முதல்வர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் கள ஆய்வு செய்ய உள்ளார். முதற்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான ஆய்வு கூட்டம் மறைமலைநகரில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மன்ற கட்டடத்தில் நடைபெற உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்றும், நாளையும் இரண்டு நாட்களுக்கு ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. முதல் நாள் கூட்டத்தில், காவல்துறை அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார். அப்போது, சட்டம் - ஒழுங்கு, குற்றச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

நான்கு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் அடிப்படை வசதிகள், வேளாண், நகர்ப்புற வளர்ச்சி, சுகாதாரம் உள்ளிட்ட 28 துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார்.

மறைமலை நகரில் முதல்வர் வருகையை முன்னிட்டு, அப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு ட்ரோன் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சரின் பாதுகாப்புத்துறை அதிகாரி திருநாவுக்கரசு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் காவல் துணை ஆணையர் பவன்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

காணொலி காட்சி மூலமாக மாவட்டத்தில் உள்ள மக்களை தொடர்பு கொண்டு பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனையும் அரசு உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனிடையே முதல்வரின் வருகையை ஒட்டி பிரம்மாண்டமாக வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in