பெரும்பான்மையை நிரூபித்தார் ஏக்நாத் ஷிண்டே...உறுதியானது மகாராஷ்டிர முதல்வர் அரியணை!

பெரும்பான்மையை நிரூபித்தார் ஏக்நாத் ஷிண்டே...உறுதியானது மகாராஷ்டிர முதல்வர் அரியணை!

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 145 வாக்குகள் தேவை என்ற நிலையில் 164 வாக்குகளை பெற்று பெரும்பான்மையை நிரூபித்தார் ஏக்நாத் ஷிண்டே. நேற்று தேர்வான புதிய சபாநாயகர் ராகுல் நவேர்கர் தலைமையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் ஒவ்வொரு வேட்பாளரையும் நிற்கவைத்து அவர்களின் வாக்கு பதிவு செய்யப்பட்டது.

உத்தவ் தாக்கரே ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான சந்தோஷ் பங்கார் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக வாக்களித்தார். சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 106 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஏக்நாத் ஷிண்டேவுக்கு 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. சில சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகளும் ஷிண்டே அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

மகாராஷ்ட்டிராவில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கடந்த ஜூன் 20ம் தேதி உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். முதலில் குஜராத்திலும் பின்னர் கவுகாத்தியிழும் ஷிண்டே தலைமையில் முகாமிட்டிருந்த 40 சிவசேனா சட்ட மன்ற உறுப்பினர்களால் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசுக்கு சிக்கல் எழுந்தது. இந்த சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் உத்தவ் தாக்கரே பதவி விலகிய நிலையில் புதிய முதல்வராக கடந்த ஜுன் 30-ம் தேதி ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in