அரசு விழாவாக கொண்டாடப்பட்ட கருணாநிதியின் பிறந்த நாள்: முதல்வர், அமைச்சர்கள் கருணாநிதி சிலைக்கு மரியாதை

அரசு விழாவாக கொண்டாடப்பட்ட கருணாநிதியின் பிறந்த நாள்: முதல்வர், அமைச்சர்கள் கருணாநிதி சிலைக்கு மரியாதை

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், அவரது உருவச் சிலை சென்னையில் அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் கருணாநிதியின் உருவச் சிலை அமைக்கப்பட்டது. அதை குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு மே 28-ம் தேதி திறந்து வைத்தார்.

முதல்வரின் அறிவிப்பின்படி, இந்த ஆண்டு முதல் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் , கருணாநிதியின் திருவுருவ படத்துக்கு இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில்அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதியின் உருவச்சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழகம் முழுவதும் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in