இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டுமே முழுமையாக தீர்க்க முடியாது எனவும், கார்ப்பரேட் நிறுவனங்கள் கூடுதலாக வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஆளும் கட்சி கூடுதல் வேலைவாய்ப்புகளுக்கு உத்தரவாதம் அளித்துவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே அளித்த உத்தரவாதத்தின்படி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் மனித வள மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ’இந்திய வேலை வாய்ப்பு அறிக்கை 2024’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்தியாவில் தொழிலாளர்களுக்கு இடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, பெண் தொழிலாளர்கள் மீதான பாரபட்சம் தொடர்ந்து இருந்து வருகிறது. என்றாலும் பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகள் அனைத்திற்கும் அரசு தலையீட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது சரியான மனநிலை அல்ல” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “லாபத்தை நோக்கி தொழில்களை முன்னெடுத்து வரும் நிறுவனங்கள் தான் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான வேலைவாய்ப்பு கணக்கீடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகவும் மெதுவான, அதேசமயம் சீரான வேகத்தில் வேலை வாய்ப்புகள் கணிசமாக உயர்ந்து வருகின்றன. இருப்பினும் கரோனா காலகட்டத்திற்கு பிறகு பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும் வேலைவாய்ப்பு திண்டாட்டம் என்பது மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!
வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?