அமைச்சரிடம் சிக்கிய அபூர்வா ஐஏஎஸ்: போட்டுக் கொடுத்த வியாபாரிகள்

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபுஅமைச்சரிடம் சிக்கிய அபூர்வா ஐஏஎஸ்: போட்டுக் கொடுத்த வியாபாரிகள்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் சிஎம்டிஏ சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் காய்கறி சந்தையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு வியாபாரிகளிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அப்போது அனுமதி இல்லாமல் கடைகள் போடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் சேகர்பாபு, " இந்த இடத்தில் எப்படி இவ்வளவு கடைகள் வந்தது ஏன்? எதற்காக அனுமதி வழங்கினீர்கள்" என அடுக்கக்கடுக்கான கேள்விகளை அதிகாரிகளிடம் எழுப்பினார். அதற்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். இந்த கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில்,‘’ சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் சேதமடைந்த இடங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறி சந்தையில் மொத்தமுள்ள 3941 கடைகள் வெளிநாடுகளில் உள்ள மார்கெட்டுகள் போல் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்தடுத்து பழங்கள் அங்காடி, உணவு தானிய அங்காடி, பேருந்து நிறுத்தம் போன்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கோயம்பேடு காய்கறி மார்கெட் பகுதி பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

கோயம்பேட்டில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
கோயம்பேட்டில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வுஅமைச்சரிடம் சிக்கிய அபூர்வா ஐஏஎஸ்: போட்டுக் கொடுத்த வியாபாரிகள்

அமைச்சர் பேசும் போதே குறிக்கிட்ட வியாபாரிகள் சங்க நிர்வாகி தாமோதரன் என்பவர்," கடந்த ஆட்சி காலத்தில் அமைச்சர் கோட்டாவில் 27 கடைகள் ஒதுக்கப்பட்டன. அதில் 25 கடைகளுக்கு அனுமதி இல்லை என நீக்கப்பட்டன ஆனால் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு சொந்தமான கடைகள் மட்டும் அகற்றப்படாமல் உள்ளன. இதுகுறித்து முதன்மைச் செயலாளர் அபூர்வாவிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை இல்லை" என்று குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அருகில் இருந்த முதன்மைச் செயலாளர் அபூர்வாவிடம் அமைச்சர் சேகர்பாபு கேட்டார். அதற்கு அவர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என தெரிவிக்க, அதெல்லாம் இல்லை என வியாபாரி மறுத்தார். இதனால் கோபமடைந்த அமைச்சர், அதிகாரியைக் கண்டித்து இந்த விவகாரம் தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்க அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

அமைச்சரிடம் அதிகாரியை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் போட்டுக் கொடுத்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in