ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழகத்தில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் முடிவு செய்திருந்தது. இது தொடர்பாக தமிழக காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால் தமிழக காவல்துறை ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ஆர்எஸ்எஸ் பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய திடலில் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் அவ்வாறு விண்ணப்பித்தால் சட்டப்படி பரிசீலனை செய்து முடிவெடுக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

அதே நேரத்தில் கருத்துரிமை, பேச்சுரிமை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும் என்றும் கடும் கட்டுப்பாடுடன் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். மேலும் கோவை பொள்ளாச்சி உள்பட ஆறு இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய மூன்று இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரை நடத்தலாம் என்றும் ஆறு இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும் வரை ஆர்எஸ்எஸ் காத்திருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.

இதையடுத்து மார்ச் 5-ம் தேதி நடைபெறும் பேரணிக்கு அனுமதி தர கோரி டிஜிபியிடம் ஆர்எஸ்எஸ் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அனுமதி தராவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை உள்ளாக நேரிடும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தந்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்திருக்கிறது. அதில், அரசின் அதிகாரத்திற்குள் நீதிமன்றம் தலையிட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in