மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது... திட்டவட்டமாக மறுத்துவிட்ட உயர் நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சம்பந்தமாக மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மதிமுகவின் விண்ணப்பத்தை நிராகரித்து தேர்தல் ஆணையம் மதிமுகவுக்கு பதில் அனுப்பியிருந்தது. இந்தப் பின்னணியில் வைகோ தாக்கல் செய்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.

பம்பரம் சின்னம்
பம்பரம் சின்னம்

அப்போது, பம்பரம் சின்னம் ஒதுக்க மறுத்து தேர்தல் ஆணையம் அளித்த பதிலை மதிமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் படித்துக் காட்டினார். கடந்த 2010-ம் ஆண்டு மதிமுகவின் அங்கீகாரம் ரத்தான போதும் 2019-ம் ஆண்டு வரை மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. தற்போது ஒதுக்கீட்டு சின்னமாக பம்பரம் இல்லாத நிலையில், அதை பொது சின்னமாக அறிவித்து, தங்களுக்கு ஒதுக்க எந்தத் தடையும் இல்லை என அஜ்மல்கான் வாதிட்டார்.

மேலும், இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையின்படி, வேறொரு மாநிலத்தில் மேலும் ஒரு தொகுதியில் போட்டியிடவும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வைகோ
வைகோ

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ”ஒதுக்கீட்டு சின்னத்தில் இருந்து நீக்கப்பட்ட சின்னத்தை பொது சின்னமாக கருத முடியுமா? அந்த சின்னத்தை மதிமுகவுக்கு தேர்தல் அதிகாரி ஒதுக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், ”ஒரே மாநிலத்தில் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே ஏற்கெனவே வழங்கப்பட்ட ஒதுக்கீட்டு சின்னத்தை வழங்க முடியும்” என தெரிவித்தார்.

”மேலும் பம்பரம் சின்னத்தை தேர்தல் ஆணையம், பொதுச்சின்னமாக அறிவித்து இன்னும் அறிவிப்பாணை வெளியிடாத நிலையில், அதை எவருக்கும் ஒதுக்க முடியாது” எனவும் தெரிவித்த அவர், “விதிகளை பூர்த்தி செய்யாததால், விதிகளில் இல்லாத கோரிக்கையை பரிசீலிக்க முடியாது” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னத்தை ஒதுக்கும்படி மதிமுக கோரலாம். பம்பரம் சின்னம் பொதுச்சின்னமாக அறிவிக்கப்படாததால், அதை பொது சின்னமாக கருத முடியாது” எனத் தெரிவித்தனர்.

அத்துடன், “சின்னம் ஒதுக்கீடு தொடர்பான நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யாத நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதாலும், பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது” எனக் கூறி, வைகோவின் மனுவை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...  


ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in