யூடியூப்பில் அவதூறு கருத்து... நடுரோட்டில் மோதிக் கொண்ட பாஜக நிர்வாகிகள்!

யூடியூப்பில் அவதூறு கருத்து... நடுரோட்டில் மோதிக் கொண்ட பாஜக நிர்வாகிகள்!

சென்னையில் யூடியூப் சேனலில் பாஜக நிர்வாகி குறித்து அவதூறாக பேசியதால் இருதரப்பினர்கள் நடுரோட்டில் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கீழ்கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் பாஜகவில் சென்னை கிழக்கு மாவட்ட ஐடி பிரிவு செயலாளராக பதவி விகித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜேஷ், யூடியூப் சேனல் ஒன்றில் சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொது செயலாளர் சுப்பையாவை குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பாஜக நிர்வாகி சுப்பையா, தனது அக்கா மகன் முத்தரசன் மற்றும் நங்கநல்லூர் பாஜக மண்டல் தலைவர் ஜவகர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோருடன் சேர்ந்து நேற்று இரவு பழவந்தாங்கல் எம்.எம்.டி.சி காலனி அருகே வைத்து ராஜேஷை சரமாரியாக தாக்கினர்.

இதில் காயம் அடைந்த ராஜேஷ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாஜக நிர்வாகிகள் நடுரோட்டில் அடித்து கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து பழவந்தாங்கல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாஜக நிர்வாகிகள் தாக்கி கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in