மின்வேலியில் சிக்கி பலியான சிறுத்தை: மாவட்ட வனத்துறை அலுவலர் முன் ஆஜரான ஓபிஎஸ் மகன்

மின்வேலியில் சிக்கி பலியான சிறுத்தை: மாவட்ட வனத்துறை அலுவலர் முன்  ஆஜரான ஓபிஎஸ் மகன்

மின்வேலியில் சிக்கி சிறுத்தை பலியான விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் வன அலுவலர் அலுவலகம் முன்பு இன்று நேரில் ஆஜரானார்.

தேனி மாவட்டம் கைலாசப்பட்டி வனப்பகுதியில் கடந்த செப்.28-ம் தேதி உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் மகேந்திரனைத் தாக்கிய சிறுத்தை, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மகன், ரவீந்திரநாத் எம்.பி தோட்டத்தில் வாயில் ரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆடு வளர்த்து வந்த அலெக்ஸ் பாண்டியன் என்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர். இதற்கு கால்நடை வளர்ப்போர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து ரவீந்திரநாத் எம்.பியின் தோட்ட மேலாளர்கள் ராஜவேல் மற்றும் தங்கவேல் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், நவ. 1-ம் தேதி சிறுத்தை இறந்த தோட்டத்தின் உரிமையாளரான ரவீந்திரநாத் எம்.பிக்கு மாவட்ட வனத்துறை அலுவலர் முன்பு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதனால் இரண்டாவது முறையாக ரவிந்திரநாத் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி தேனி மாவட்ட வனத்துறை அலுவலர் சமர்தா முன்பு ரவீந்திரநாத் எம்.பி இன்று ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in