சத்தீஸ்கரில் 23 ஆண்டுகளுக்கு பிறகு வாக்களிக்கும் மக்கள்!

சத்தீஸ்கரில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
சத்தீஸ்கரில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் 23 ஆண்டுகளுக்கு பிறகு நக்சல்கள் நடமாட்டம் உள்ள கரிகுண்டம் கிராம மக்கள் வாக்களித்து வருவதால், அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் பெரும்பாலான இடங்கள் நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்பதால், பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நக்சல்களின் கோட்டை என வர்ணிக்கப்படும் தண்டேவாடா பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

23 ஆண்டுகளுக்கு பின்னர் வாக்களிக்கும் கரிகுண்டம் கிராமம்
23 ஆண்டுகளுக்கு பின்னர் வாக்களிக்கும் கரிகுண்டம் கிராமம்

இந்த தொகுதியில், காங்கிரஸ் சார்பில் சவிந்திர கர்மாவும், பாஜக சார்பில் சைத்திரன் அதானியும் களத்தில் உள்ளனர். இருவருமே முன்பு தடை செய்யப்பட்டிருந்த சுல்வா ஜுடும் என்ற அமைப்பில் பங்கு பெற்றிருந்தவர்கள் ஆவர். இதற்கு முன்பு இத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த காங்கிரஸின் மகிந்தர கர்மா மற்றும் பாஜகவின் பீமா மண்டவி ஆகிய இருவரும் நக்சல்கள் தாக்குதலில் உயிரிழந்திருந்தனர்.

600 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்
600 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்

இத்தகைய பரபரப்பான சூழலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இத்தொகுதியில் உள்ள கரிகுண்டம் கிராம மக்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்களித்து வருகின்றனர். பழங்குடியினத்தை சேர்ந்த சுமார் 600 பேர் மட்டுமே வசிக்கும் இந்த கிராமத்தில், பல ஆண்டுகளாக நக்சல்கள் பாதிப்பால் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படாததால் அவர்கள் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில்  பாதுகாப்பு படை வீரர் காயம்!

திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!

வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in