தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்றுங்கள்! சோனியாவிடம் வலியுறுத்திய கார்த்தி சிதம்பரம்

சோனியா ஆலோசனை
சோனியா ஆலோசனை

தமிழக காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவரை மாற்ற வேண்டும் என்று சோனியா காந்தியிடம் கார்த்தி சிதம்பரம் உள்பட கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், கட்சியின் பொது செயலாளருமான பிரியங்கா காந்தியும் சென்னை வந்துள்ளனர். சோனியாவும், பிரியங்காவும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கிண்டி நட்சத்திர ஓட்டலில் ஆலோசனை நடத்தினர். அப்போது, தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு கட்சி நிர்வாகிகள் கட்டுப்பட வேண்டும் என்றும் உட்கட்சி பூசலுக்கு இடம் அளிக்காமல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என்றும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

சோனியா ஆலோசனை
சோனியா ஆலோசனை

இதைத்தொடர்ந்து, "தமிழக காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவரை மாற்ற வேண்டும் என்றும் 5 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருப்பதால் மாற்ற வேண்டும்" எனவும் சோனியா காந்தியிடம் கார்த்தி சிதம்பரம் உள்பட தமிழக கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதோடு, "தமிழக காங்கிரஸ் புதிய மேலிட பொறுப்பாளரை உடனடியாக நியமிக்க வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். தேர்தலில் போட்டியிட மீண்டும் மீண்டும் ஒரே நபருக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது" என்று நிர்வாகிகள் முன்வைத்தனர். இதபோல், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பெண் தலைவரை நியமிக்க வேண்டும் என்று சோனியா காந்தியிடம் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in