அமைச்சர் ராஜ கண்ணப்பனின் இலாகா அதிரடி மாற்றம்

அமைச்சர் ராஜ கண்ணப்பனின் இலாகா அதிரடி மாற்றம்

போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனின் இலாகா மாற்றப்பட்டுள்ளது. அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை சாதி பெயரை கூறி பேசியதாகவும், இடமாற்றம் செய்யப்போவதாக மிரட்டியதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது குற்றம்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனின் இலாகா அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கருக்கு போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்த பிறகு முதன் முறையாக அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.