டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவும் கைதாவார்: பாஜக தலைவர்

சந்திரசேகர் ராவின் மகள் கவிதா
சந்திரசேகர் ராவின் மகள் கவிதாடெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவும் கைதாவார்: பாஜக தலைவர்

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா விரைவில் சிபிஐயால் கைது செய்யப்படுவார் என்று பாஜக தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதியின் எம்எல்சி கே.கவிதா ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.150 கோடி வழங்கியதாக தெலங்கானா பாஜக தலைவர் விவேக் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய "பஞ்சாப், குஜராத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு கவிதா ரூ.150 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது. மதுபான முறைகேட்டில் மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. கவிதாவும் விரைவில் கைது செய்யப்படுவார்" எனக் கூறினார்.

முன்னதாக, அமலாக்கத்துறை, கலால் கொள்கை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் கே.கவிதாவின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் மதுபான நிறுவனத்தில் 65 சதவீத பங்குகளை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டியது. மேலும், டிசம்பர் 11, 2022 அன்று ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

கலால் வரிக் கொள்கையை வடிவமைத்து அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை சிபிஐ-யால் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in