நிதீஷ் குமார்- சந்திரசேகர் ராவ் திடீர் சந்திப்பு: பாஜகவிற்கு எதிராக அணி திரட்டும் முயற்சியா?

நிதீஷ் குமார்- சந்திரசேகர் ராவ் திடீர் சந்திப்பு: பாஜகவிற்கு எதிராக அணி திரட்டும் முயற்சியா?

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பிஹார் முதல்வர் நிதீஷ் குமாரை இன்று சந்தித்துப் பேசினார். பாஜகவிற்கு எதிராக அணிதிரட்டும் முயற்சியாக இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணியுடன் பிஹாரில் நிதீஷ் குமார் ஆட்சி அமைத்துள்ளார். பிஹாரில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம் பாஜகவிற்கு எதிராக இயங்கும் அரசியல் கட்சிகளுக்கு புத்துணர்வைக் கொடுத்துள்ளது. நிதீஷ் குமார் முடிவை ஆதரிக்கும் விதமாக பல்வேறு அரசியல் கட்சியினரும், அவரின் முடிவை வரவேற்றுள்ளனர். இந்நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை இன்று சந்தித்துப் பேசினார். பிஹார் மாநிலம் பாட்னாவில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிரான வலிமையான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் நிதீஷ் குமார்- சந்திரசேகர் ராவ் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in